என் மலர்
நீங்கள் தேடியது "Jamabandhi festival"
- மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மேல்மலையனூர் வட்டாட்சியர் பாலசுப்பிர மணியம் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 310 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 58 ஆயிரத்து 884 ரூபாய் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை ,பிரதம மந்திரி வீடு கட்டும் பயணாளிகளுக்கு வீடுகள் கட்ட பணியாணை, விவசா யத் துறை மூலம் வேளாண் இடுபொருட்களும், மருத்து வம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மேல்மலையனூர் வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன், துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை சந்திரகுப்தன், ஜமாபந்தி மேலாளர் கோவர்தனன், தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் துரைச்செல்வன், மண்டல துணை வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன்,தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் தனலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ண தாஸ், வட்ட துணை ஆய்வா ளர் செழியன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோ த்துங்கன், சரவணகுமார்,வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், நேரு ,ஹரிகிருஷ்ணன் ,முதுநிலை வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், மேல்மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்டவட்டாச்சியர் செல்வகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.






