என் மலர்
நீங்கள் தேடியது "IT Woman Employee Dead"
- பஸ் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்.
- பிரியங்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா. 22 வயதான இவர் கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷி நாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இருவரும் ஓட்டலில் சாப்பிடுவதற்கு சென்றனர். ராயப்பேட்டை மேம்பாலத்தில் சென்ற போது ரிஷிநாதன் முன்னால் சென்ற மாநகர பஸ்சை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர் திசையில் வந்த கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரியங்கா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி பிரியங்கா உடல் நசுங்கினார். பஸ் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள். இந்த விபத்தில் ரிஷிநாதன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.






