என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » investigation commission
நீங்கள் தேடியது "Investigation Commission"
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள ஆணையம் அக்டோபர் 24-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. #Jayadeathprobe
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து பெங்களூரு சிறையில் இருந்து வரும் சசிகலா வக்கீல்கள் மூலம் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளார். சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் என 75-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்ட போதும் நவம்பர் 22-ந் தேதி தான் ஆணையம் நேரடி விசாரணையை தொடங்கியது. ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய ஆரம்பத்தில் 3 மாதம் மட்டுமே தமிழக அரசு கால அவகாசம் வழங்கியது. அதன்பின்பு, ஒரு முறை 6 மாதமும், மற்றொரு முறை 4 மாதமும் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த கால அவகாசம் அக்டோபர் 24-ந் தேதி முடிவடைகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் பெரும்பாலானோரிடம் விசாரணை முடிவடைந்து விட்டது. அப்பல்லோ மருத்துவர்கள் சிலரிடமும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டுபீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடமும் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து அக்டோபர் 24-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை மற்றும் உணவுக்குழாய் சிறப்பு மருத்துவர் பழனிசாமி நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு செப்டம்பர் 25, 27, 29 ஆகிய தேதிகளில் ஜெயலலிதாவுக்கு வயிற்று கோளாறு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நான், அவருக்கு சிகிச்சை அளித்தேன். உரிய மருந்து, மாத்திரைகளுக்கு பின்பு வயிற்று கோளாறு சரியானது. இதன்பின்பு, அக்டோபர் 10-ந் தேதிக்கு பின்னர் ஒரு நாள் ஜெயலலிதாவுக்கு மீண்டும் வயிற்று கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்து சம்பந்தமான விவரங்கள் இ-மெயில் மூலம் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விவரங்களை பார்த்து உணவில் புரோட்டீன் அளவை குறைக்க ஆலோசனை தெரிவித்தேன்.
அதன்படி, புரோட்டீன் அளவு குறைக்கப்பட்டதும் வயிற்று கோளாறு சரியானது. அதன்பின்பு நான், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. வயிற்றுக்கோளாறு பிரச்சினையை தவிர்க்க இனிப்பு மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்திருந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இனிப்பு மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரைத்த போதிலும் ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டுள்ளதே? என்று ஆணையத்தின் வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி மருத்துவர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மருத்துவர் பதில் அளித்துள்ளார்.
செவிலியர் அனுஷா நேற்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. அவர், வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மற்றொரு நாள் அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. #Jayadeathprobe

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர் ஆனார். #Jayalalithaa #JayaDeathProbe
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.
இதில் இதுவரைக்கும் 40-க்கும் மேற்பட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது கடந்த 1 வாரமாக அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகளிடம் விசாரணை நடக்கிறது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியின் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். இவர் போயஸ் கார்டனுக்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதாவை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தவர்.
அன்றைய தினம் ஜெயலலிதா போயஸ் கார்டனில் எந்த நிலையில் இருந்தார் என்று இவர் ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த மற்றொரு செவிலியர் அனீஸ் நேற்று ஆணையத்தில் ஆஜராகி இருந்தார்.

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எந்த நிலையில் இருந்தார். அவருடன் வந்தது யார்? என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்தனர். இவர்கள் கொடுத்த விவரங்களும் அனைத்து வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. #Jayalalithaa #JayaDeathProbe

இன்று அனீஸ் மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அப்பல்லோ ஆஸ்பத்திரி செவிலியர் சாமுண்டீஸ்வரியும் ஆஜர் ஆனார்.

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எந்த நிலையில் இருந்தார். அவருடன் வந்தது யார்? என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்தனர். இவர்கள் கொடுத்த விவரங்களும் அனைத்து வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. #Jayalalithaa #JayaDeathProbe
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் 25-ந் தேதி ஆஜராகும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் இல்லத்தில் வேலை பார்த்த நிர்வாகிகள் என அனைத்து தரப்பினருக்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்றுக்கொண்டவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 8-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விசாரணை கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 9-ந் தேதி அப்பல்லோ டாக்டர் சாந்தாராம் விசாரணையில் பங்கேற்றார். இடையில் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது வரும் 25-ந் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடங்க இருக்கிறது.
அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன், ஜெயலலிதா தோழியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர்சயத் ஆகியோர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் 25-ந் தேதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை ஆணையத்திடம் தெரிவிக்க இருக்கின்றனர். ஜெயலலிதாவின் பள்ளி தோழி என்பதால் பதர்சயத் ஆணையத்திடம் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து தனக்கு தெரிந்த பரபரப்பு தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதில் சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன் மறு விசாரணைக்காக ஆஜர் ஆகிறார்.
அதேவேளையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருக்கும் பொன்.மாணிக்கவேலும் முதல் முறையாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, விளக்கமளிக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, கடந்த 2012-ம் ஆண்டு பொன்.மாணிக்கவேல் மாநில உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி உள்ளார். எனவே அவர் அந்த பதவியில் இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த இருக்கிறார். எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்து வரும் ஐ.ஜி. பொன்.மணிக்கவேல், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையிலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.
இதனை தொடர்ந்து 26-ந் தேதி சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்த இருக்கிறார். அப்போது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கூடுதல் டி.எஸ்.பி. வீரபெருமாள், கவர்னர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் ஆர்.சீனிவாசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ஆகியோர் நேரில் ஆஜராகி, குறுக்கு விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இதற்கான சம்மன் அவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

×

X