search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internet connection"

    • பைபர் ஆப்டிக்கல் கேபிள் மூலம் 1 ஜி.பி., அளவில் மேம்பட்ட அலைவரிசை வழங்கப்படுகிறது.
    • மாவட்டம் முழுவதும் 265 கிராமங்களுக்கு, இணைய இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    காங்கயம் :

    தமிழகத்தில் தமிழ்நாடு பைபர் நெட் நிறுவனம் வாயிலாக 12,525 கிராம ங்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பைபர் ஆப்டிக்கல் கேபிள் மூலம் 1 ஜி.பி., அளவில் மேம்பட்ட அலைவரிசை வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் மூலம் (எல் அண்டு டி), கிராமப்புற பகுதிகளுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்குவதற்கான பைபர் ஆப்டிக்கல் கேபிள் அமைக்கும் பணிகள் வெள்ளகோவிலில் துவங்கி முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. வெள்ளகோவிலில் மேட்டுப்பாளையம், வேலம்பாளையம், வள்ளி யரச்சல், பச்சாபாளையம், வீரசோழபுரம், பாப்பினி, வீரணம்பாளையம் பிரதான கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காங்கயம் பகுதியில் இப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. மூலனூர், தாராபுரம், உடுமலை என அடுத்தடுத்த பகுதிகளில், பிரதான கேபிள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.மாவட்டம் முழுவதும் 265 கிராமங்களுக்கு, இணைய இணைப்பு வழங்கப்பட உள்ளது. மின் வாரிய அனுமதி பெற்று மின் கம்பங்களில் கட்டப்பட்டும் தேவையான இடங்களில் புதிய கம்பங்கள் போடப்பட்டு கேபிள் அமைக்கப்பட்டுவருகிறது.

    பிரதான கேபிள் அமைக்கப்பட்டபின் முதல்கட்டமாக, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், கிராமப்புற வங்கிகள், நூலகம், போலீஸ் நிலையங்களுக்கும், அதன்பின் தனிநபர் வீடுகளுக்கும் இணையதள இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளை தொடர்ந்து நகர பகுதிகளில் கேபிள் அமைக்கும் பணிகள் நடைபெறும்.மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன பிரிவினர் இணையதள கேபிள் அமைக்கும் பணிகளை கண்காணித்து வருகின்றனர். ஒரே கேபிளில் டிவி சேனல், தொலைபேசி இணைப்பு, இணையதள இணைப்பு வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பைபர் ஆப்டிக்கல் கேபிள் 3வகை இணைப்புகளையும் வழங்குவதற்கான கட்டமைப்பை கொண்டுள்ளது. கிராமப்புற மக்கள் ஆதார் திருத்தம், வருவாய்த் துறை சார்ந்த ஏராளமான அரசு சேவைகளை பெறுவதற்காக நகரங்களை நோக்கி வரும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும்வகையில் கிராமப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இ-சேவை மையங்களை ஏற்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதிவேக இணையதள வசதி கிடைப்பதன்மூலம் கிராமப்புற இ-சேவை மையங்களின் செயல்பா டுகள் வேகம்பெறும்.பணிகளை விரைந்து முடித்து விரைவில் வீடுகளுக்கு இணையதள இணைப்பு வழங்கவேண்டும் என கிராமப்புற மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிவேக இணையதள வசதி கிடைப்பதன்மூலம் கிராமப்புற இ-சேவை மையங்களின் செயல்பா டுகள் வேகம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    ×