search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "international money transfer"

    • ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் செல்போன் எண்ணிற்கு ரூபாய் 2,09,972 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
    • சைபர் கிரைம் இணையதள முகவரியில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் புகார் பதிவு செய்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன். இவர் துபாய் செல்வதற்காக அவருடைய கிரெடிட் கார்டில் சர்வதேச பண பரிவர்த்தனையை பதிவு செய்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24 -ந்தேதி அவரது செல்போன் எண்ணிற்கு (இந்திய மதிப்பில் ரூபாய் 2,09,972/-) அமெரிக்க டாலர் பணம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மேற்படி ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் அவரது கிரெடிட் கார்டை பிளாக் செய்து சைபர் கிரைம் இணையதள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன். தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் ஒருமுறை பதிவு எண் எதுவும் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது.இதனால் சம்மந்தப்பட்ட வங்கி மேற்படி தொடர்புடைய பண பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தம் செய்து ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் இழந்த பணத்தை திருப்பி அவருடைய கிரெடிட் கார்டில் வரவு வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ராமசாமி வெங்கட சுப்பிரமணியனை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணம் வரவு வைக்கப்பட்டதிற்கான ஆவணங்களை நேற்று வழங்கினார்.

    ×