search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insurance Mandatory"

    • சரக்கு மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.
    • தேதி காலாவதியாகி இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    நாம் பயன்படுத்தும் சொந்த வாகனம் அல்லது பொதுத்துறை மற்றும் பயணிகள் வாகனம் என்று எதுவாக இருந்தாலும், அந்த வாகனத்துக்குபுகைச்சான்று மற்றும் இன்சூரன்ஸ் வைத்திருப்பது அவசியம்.புதுடெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது. அதனால் அங்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு புகைச்சான்று அவசியம். புகைச்சான்று இல்லாத வாகனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

    புகைச்சான்று இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வழங்கப்படுவதில்லை. சரக்கு மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.பிற மாநிலங்களிலும், இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாகனத்திலும் புகைச்சான்றும், இன்சூரன்சும் அவசியம் வைத்திருக்க வேண்டும். தேதி காலாவதியாகி இருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புகைச்சான்றும், இன்சூரன்சும் காலாவதியாகி இருந்து, அப்போது வாகனம் விபத்துக்குள்ளாகி இருந்தால் அந்த வாகனத்தை இயக்கியவர், உடன் பயணித்தவர் ஆகிய இரு தரப்பினருக்கும் இன்சூரன்ஸ் பணப்பலன்கள் போய் சேராது. அதை கேட்டும் பெற முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்கின்றனர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள்.

    இதுகுறித்து திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், இந்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்தின், இப்புதிய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பணப்பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.இதுதொடர்பான வழக்கையும் தொடர முடியாது. அதனால், வாகன உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் இன்சூரன்ஸ் மற்றும் புகைச்சான்றை சோதித்து பெற்று வைத்திருப்பது அவசியம் என்றனர். இந்த உத்தரவு திருப்பூர் உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×