search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspector sampath"

    குட்கா ஊழல் வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன் ஆஜரானார். #gutkhacorruption #cbi

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருளை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு தொடர்பாக நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக குட்கா தயாரிக்கப்பட்டு வருவது வெளிச்சத்துக் வந்தது.

    இன்ஸ்பெக்டர் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா தயாரிப்பை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர் என்று வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடந்த அதிரடி சோதனைக்குப்பின் குடோன் உரிமையாளர் மாதவராவ் மற்றும் உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குட்கா பிடிபட்ட கால கட்டத்தில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சம்பத்தும், உதவி கமி‌ஷனராக மன்னர் மன்னனும் பணியாற்றினார்கள். இவர்களது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி சீல் வைத்துள்ளது. அவர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று இன்ஸ்பெக்டர் சம்பத் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன் ஆஜரானார்.

    விசாரணை நடத்தப்பட்ட பின்பு ராயபுரத்தில் போலீஸ் குடியிருப்பில் சீல் வைக்கப்பட்ட அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்ஸ்பெக்டர் சம்பத் லஞ்சப் பணத்தை பெற்று உயர் அதிகாரிகளுக்கு கை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. எவ்வளவு கால இடை வெளியில் யார்-யாருக்கு எந்த வகையில் பணம் கொடுக்கப்பட்டது என்றும் அவரிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அதற்கு சம்பத் அளித்த பதில்களை சி.பி.ஐ. பதிவு செய்து கொண்டது. இதனால் குட்கா ஊழல் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. #gutkhacorruption #cbi

    ×