என் மலர்
நீங்கள் தேடியது "insisted"
- அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தற்காலிகமாக கட்டப்பட்டு வரும் ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகளின் தற்போதைய நிலை குறித்தும், குன்னூர் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும், குன்னூர் வாகன நிறுத்துமிடம் அமைக்க இடம் தேர்வு செய்தல் தொடர்பாகவும் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு துறையின் வாயிலான நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், நடைபெறவுள்ள வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகள் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொண்டு, அதனை சம்மந்தப்பட்ட வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகள் தரமான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனப்பிரியா(பொது), மணிகண்டன் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






