search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inquiring"

    • கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை அறுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்ப முயன்றார்.
    • அந்த நபரை கோவில் வளாகத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் உமா. இன்று தனது உறவினர்களுடன் ஒரு காரில் வெண்ணாற்ற–ங்கரையில் உள்ள ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அப்போது சாமி தரிசனத்தை முடித்துவிட்டு உமா காரில் ஏற முயன்றார். அந்த நேரத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர் திடீரென உமாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்ப முயன்றார்.

    அதிர்ச்சி அடைந்த உமா , திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு கோவிலில் இருந்த பக்தர்கள் வேகமாக ஓடி சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த நபரை கோவில் வளாகத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்கச் சங்கிலியை பறித்த நபர் யார்? எந்த ஊர்? இதற்கு முன் இதுபோல் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளாரா ?

    என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணை முடிவில் அந்த நபர் பற்றிய தகவல் கிடைக்கும்.‌ இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×