என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "industrious"

    சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு ஏற்பட்டதால் தொழில் அதிபரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையிலும் ஈடுபட்டனர். #Eggnutritioncorruption

    சேலம்:

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை, சத்து மாவு, பருப்பு உள்பட பல பொருட்களை கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ஆண்டி பாளையத்தில் இதன் அலுவலகம் உள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாட காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள இந்த நிறுவனம் அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விநியோகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கிறிஸ்டி நிறுவனம் போலியான பெயர்களில் நிறுவனங்களை உருவாக்கி அங்கிருந்து பொருட்களை வாங்கியதாக புகார்கள் எழுந்தன. அதோடு போலி கணக்கு தாக்கல் செய்து வரி ஏய்ப்பிலும் கருப்பு பணத்தை பதுக்கியதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து கிறிஸ்டி நிறுவனத்திலும் அதன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர். கோவை,பெங்களூருவில் உள்ள கிறிஸ்டி நிறுவன அலுவலகங்கள், சென்னை திருவான்மியூரில் உள்ள அதன் உரிமையாளர் பி.எஸ். குமாரசாமியின் வீடு மற்றும் அலுவலகம், கோவையில் உள்ள நேச்சுரல் புட் புராடக்ட்ஸ், சுவர்ணபூமி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதே போல கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் நண்பர் ஜெயப்பிரகாஷ், சென்னை மயிலாப்பூரில் அக்னி எஸ்டேட்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய் கிறார். அவரது வீடு அலுவல கம் மற்றும் திருச்செங்கோடு மோர்பாளையத்தில் உள்ள குமாரசாமியில் மற்றொரு வீடு அவரது நண்பர்கள், உறவி னர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் வட்டூரில் உள்ள உரிமையாளர் குமாரசாமி வீடு, கூட்டப் பள்ளியில் உள்ள நிறுவனத்தின் ஆடிட்டர்கள் ராம கிருஷ்ணன், சங்கர் ஆகியோரது வீடு, தொண்டிக்கரடு, விட்டம் பாளையம் பகுதிகளில் உள்ள குமாரசாமியின் உறவினர்கள் வீடுகள், நாமக்கல் ராசிபுரம் சுற்று வட்டாரங்களில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள், ராசிபுரத்தில் உள்ள ராசி நியுட்ரி புட்ஸ் நிறுவனம், நாமக்கல் மாவட்டம் காதப் பள்ளி, வேப்பநத்தம், கருப்பட்டி பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் முட்டை குடோன்கள் என மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

    கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த சோதனையை தொடர்ந்து தமிழ்நாடு நுகர் பொருள் கழகத்தின் நிர்வாக இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதா தேவியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.சென்னை நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் 2 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 37 இடங்களில் சோதனை நடந்தது.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 76 இடங்களில் சுமார் 500 வருமான வரித்து துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி நிறுவன தலைவர் குமார சாமி தொழில் விசயமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்றிருந்தார். அவரிடம் அங்குள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்தனர். அவரிடம் சென்னையில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி வீட்டில் சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து அரசு அதிகாரிகள் சிலரது வங்கி கணக்குகளுக்கு லட்சக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்திருப்பதற்கான ஆதாரம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த ஆதாரத்தை குமாரசாமியிடம் காண்பித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விசாரணை இன்று காலையிலும் நீடித்தது.

    தொழில் அதிபர் குமாரசாமிக்கு சென்னையில் திருவான்மியூர், வடபழனி, கோட்டூர்புரம், அடையார் ஆகிய பகுதிகளில் சொகுசு பங்களாக்கள் உள்ளன. அந்த பங்களாக்களில் ஏதோ ஒரு பங்களாவில் வைத்து விசாரணை நடந்ததாக தெரிகிறது.

    மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை காட்டியும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் சத்துமாவு பாக்கெட்களை விநியோகம் செய்தது. அது தரமற்று இருப்பதாகவும், கெட்டு போகமால் இருக்க துத்தநாகம் அதிக அளவில் கலக்கப்படுவதாகவும் புகார் எழுந்ததால் கிறிஸ்டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கர்நாடக அரசுரத்து செய்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது கிறிஸ்டி நிறுவனம் பல போலி நிறுவனங்களை உருவாக்கி பணத்தை மாற்றியதாக கூறப்பட்டது. அதில் இருந்தே கிறிஸ்டி நிறு வனத்தின் செயல் பாடுகளை வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சோதனை நடந்தது வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் வட்டூரில் உள்ள குமாரசாமி வீடு, கூட்டப்பள்ளியில் உள்ள நிறுவனத்தின் ஆடிட்டர்கள் ராமகிருஷ்ணன், சங்கர் ஆகியோரது வீடு,தொண்டிக்கரடு, விட்டம் பாளையம் பகுதிகளில் உள்ள குமாரசாமியின் உறவினர்கள் வீடுகள், நாமக்கல் ராசிபுரம் சுற்று வட்டாரங்களில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் 2- வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நீடித்தது.

    அப்போது மேலும் பல முக்கிய ஆவனங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதில் தொடர்புடைய மேலும் சிலரிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    ×