என் மலர்
நீங்கள் தேடியது "IND-USA"
- அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்
- தனி ஒருவனாக போராடிய சூரியகுமார் அரைசதம் அடித்து அசத்தினார்.
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 6 ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இஷான் கிஷன் 20 ரன்னிலும் திலக் வர்மா 25 ரன்னிலும் அவுட்டாக துபே முதல் பந்தில் டக் அவுட்டானார்.
அடுத்ததாக இறங்கிய ரிங்கு சிங் 6 ரன்னிலும் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னிலும் அக்சர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தனி ஒருவனாக போராடிய சூரியகுமார் அரைசதம் அடித்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 161 ரன்கள் அடித்தது. சூர்யகுமார் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.
- ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக அமெரிக்காவின் எய்சென்ஹோவர் பார்க்-இல் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானம் கட்டமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தின் பிட்ச் சரியாக இல்லை என கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த மைதானத்தின் பிட்ச்கள் வெளியே தயாரிக்கப்பட்டு, அவை மைதானத்திற்குள் பொருத்தப்பட்டன. கிட்டத்தட்ட தற்காலிகமாகவே இந்த மைதானம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்று முடிந்த இந்தியா - அமெரிக்கா அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் முழுமையாக இடிக்கப்படுகிறது. இதற்காக மைதானத்தை சுற்றிலும் புல்டோசர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மைதானம் மற்றும் பிட்ச்-ஐ உள்ளூர் பயன்பாட்டிற்காக விட்டுவைத்துவிட்டு, மைதானம் முழுமையாக இடிக்கப்பட இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் 75 நாட்களில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்கது.






