search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inconvenience to people"

    • ராஜபாளையம் பஸ் நிறுத்தங்கள் மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் 60 ஆண்டு காலமாக பழைய பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அதுவும் செயல்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் வந்து செல்லும் அளவிற்கு பழைய பஸ் நிலையம் உள்ளது.

    இந்த பஸ் நிலையத்தை அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்க ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பழைய பஸ் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு 21 கடைகள், 2 உணவு விடுதிகள், 2 காத்திருக்கும் அறைகள், ஒரு புறக் காவல் நிலையம், பெண்களுக்கான பாலூட்டும் அறை போன்ற வசதிகளுடன் 2 நவீன கழிப்பிடங்களும் கட்டப்பட உள்ளன.

    பஸ் நிலையம் புதுப்பி க்கும் பணிகள் காரணமாக பஸ்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஞ்சு மார்க்கெட் டி.பி. மில்ஸ் ரோடு வழியாக ெரயில்வே பீடர் ரோடு சென்று அங்கிருந்து தென்காசி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் செல்லவும், கிழக்கே செல்லும் பஸ்கள் மதுரை சாலை, பஞ்சு மார்க்கெட், டி.பி. மில்ஸ் ரோடு வழியாக மலையடிப்பட்டி ெரயில்வே கேட் சென்று மலையடிப்பட்டி வழியாக கிழக்கே செல்லவும், தெற்கே இருந்து வரும் பஸ்கள் தென்காசி சாலை வழியாக காந்தி சிலை ரவுண்டானா வந்து மேற்கு புறமாக முடங்கியார் ரோடு திரும்பி வட்டாட்சியர் அலுவலகம் சாலை வழியாக, மாடசாமி கோவில் சாலை வழியாக பஞ்சு மார்க்கெட் சென்று வடக்கே செல்லவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் டவுன் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கும், பஞ்சு மார்க்கெட்டில் இருந்து மலையடிப்பட்டி வழியாக கிழக்கு பகுதி செல்லவும், பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து டி.பி. மில்ஸ் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு வழியாக முடங்கியார் சாலை, மாடசாமி கோவில் தெரு வழியாக ஒரு டவுன் பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஏற்கனவே ெரயில்வே மேம்பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளால் சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், பழைய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளால் எந்தெந்த டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.

    கிராமங்களுக்கு ெசல்லும் டவுன் பஸ்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்தும், அரசுமகப்பேறு மருத்துவமனை முன்பிருந்தும் புறப்ப டுவதை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு வைத்தால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தலை சுற்றுவது கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

    கூடுதலாக சிரமங்களை சந்திக்கும் பொதுமக்கள் மீது ராஜபாளையம் ெரயில் நிலையத்தையும் மேம்ப டுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. நடிகர் வடிவேல் பாணியில், ''அடிக்குமேல அடியா அடிச்சுக்கிட்டே இருந்தா' எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி இருக்கமுடியும்'' என்ற நிலை தான் ராஜபாளையம் மக்களின் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×