search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income Tax Officer"

    • வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
    • சில பெண்களிடம் அவசர வேலைக்கு லேப்-டாப் தேவைப்படுவதாக கூறி 2 பெண்களிடம் 2 லேப்-டாப்பும் ஒரு பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் பணமும் வாங்கியுள்ளார்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் ராகவன் வீதியில் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இந்த விடுதிக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் விடுதி வார்டன் கார்த்தியாயினி(65)என்பவரிடம் தன்னுடைய பெயர் ராமலட்சுமி(31) என்றும், சொந்த ஊர் மதுரை அண்ணாநகர் என்றும் கூறினார்.

    மேலும் தான் வருமானவரித் துறை அதிகாரியாக இருப்பதாகவும் கூறிய அவர், அதற்கான ஆவணங்களையும் காட்டினார். தற்போது ஐ.ஏ.எஸ்.பயிற்சி வகுப்பு சென்று வருவதாக தெரிவித்தார். நான் இங்கு தங்குவதற்கு அறை வேண்டும் என கேட்டார்.

    இதனை உண்மை என நம்பிய விடுதி வார்டன் அவரை தங்க அனுமதித்தார். அப்போது அந்த இளம்பெண் விடுதியில் தங்கி உள்ள அனைத்து பெண்களிடமும் சகஜமாக பேசியுள்ளார்.

    அப்போது அங்கு தங்கியிருந்த சில பெண்களிடம் நான் வருமான வரித்துறை அதிகாரியாக உள்ளேன். உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இளம்பெண் விடுதியில் தங்கி இருந்த சில பெண்களிடம் அவசர வேலைக்கு லேப்-டாப் தேவைப்படுவதாக கூறி 2 பெண்களிடம் 2 லேப்-டாப்பும் ஒரு பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் பணமும் வாங்கியுள்ளார். பின்னர் பணத்துடன் 2 லேப்-டாப்களையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார்.

    தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம் பெண்கள் இதுகுறித்து விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். அவர் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விசாரணையில், ராமலட்சுமி வருமான வரித்துறை அதிகாரி என கூறி போலி ஆவணங்களை காட்டி 2 லேப்டாப், ரூ.30 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ராமலட்சுமி கோவையில் உள்ள அவரது தோழி ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று ராமலட்சுமியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், ராமலட்சுமி தர்மபுரி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் தங்கி இருந்து பல்வேறு பெண்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் ராமலட்சுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×