search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inaugral ceremony"

    • தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாள்தோறும் மாலை 6.20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • செங்கோட்டை ரெயில் நிலையத்தில் வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் புகைப்படம் அடங்கிய கேக்கை வெட்டி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 18-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாள்தோறும் மாலை 6.20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், கடந்த 2004-ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவையானது, தென்காசியில் இருந்து சென்னை வரை முதலில் இயக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த 2008-ம் வருடம் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, அந்த நாள் முதல் செங்கோட்டை யிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டு 17 வருடங்கள் முடிந்து 18-வது ஆண்டு இன்று தொடங்குகிறது. இதனை கொண்டாடும் விதமாக செங்கோட்டை ெரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாகவும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தி.மு.க. நகர செயலாளர் ரஹீம் உள்ளிட்டோர் சார்பாகவும் பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயிலுக்கு மாலை அணிவித்து தோர ணங்கள் கட்டப்பட்டன.

    தொடர்ந்து, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 18-வது ஆண்டை கொண்டாடும் வகையில், செங்கோட்டை ரெயில் நிலையத்தில் வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் புகைப்படம் அடங்கிய கேக்கை வெட்டி பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 18-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

    ×