என் மலர்
நீங்கள் தேடியது "Inappropriate words"
- தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இவர் டி.கல்லுப்பட்டி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகுடாதிபதி (வயது54). இவர் டி.கல்லுப்பட்டி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். நேற்று மாலை 5.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் ஏழு ஊர் அம்மன் திருவிழாவிற்கு தனது வார்டில் சாலையை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர்களை அனுப்ப வேண்டும் என மகுடாதிபதி டி.கல்லுப்பட்டி செயல் அலுவலர் மற்றும் என்ஜினியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான முத்துகணேஷ் மற்றும் மேஸ்திரி கனகராஜ் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் மகுடாதிபதி புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரூராட்சித் தலைவர் முத்து கணேசன் மற்றும் உடந்தையாக இருந்த பேரூராட்சி மேஸ்திரி கனகராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.