search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Idolatry"

    • காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் விநாயகர் சிலை வழிபாட்டில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    • பாலசுப்பிரமணியம் கதவைத் திறந்தபோது கையில் அரிவாளுடன் செந்தில் நின்றுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் விநாயகர் சிலை வழிபாட்டில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை கிராமத்தில், விநாயகர் சிலை வைப்பது தொடர்பான பிரச்சினையில், தோப்புத் தெருவைச் சேர்ந்த ஜே.சி.பி ஆப்பரேட்டர் பாலசுப்பிரமணியம் (வயது49) தரப்புக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி (66) தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது மகள் கவுசல்யாவை கல்லூரியில் சேர்ப்பதற்காக, மனைவி தமிழரசியுடன் பாலசுப்பிரமணியம் மோட்டார்சைக்களில் புறப்பட்டார். அப்போது பாலசுப்பிரமணியத்தின் மோட்டார் சைக்கிளை, ராஜலட்சுமியின் மகன்களாகிய சங்கர், செந்தில் இருவரும் மறித்து பிரச்சனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாலசுப்பிரமணியத்தின் வீட்டு காலிங் பெல்லை செந்தில் அடித்துள்ளார். . இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம், அவரது மனைவி தமிழரசி, அதே பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செந்தில் மற்றும் ராஜலட்சுமியிடம் தகராறு செய்து தாக்கிய தாக கூறப்படுகிறது. அவர்களும் பதிலுக்கு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாலசுப்பிரமணியம், ராஜலட்சுமி இரு தரப்பினரும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    ×