என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband sets himself on"

    • செந்தில்குமார் மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்துள்ளார்.
    • மண் எண்ணையை ஊற்றி தீ பற்றவைத்து கொண்டு தற்கொலை செய்ய முயன்றார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் ஆலமரத்து காட்டை சேர்ந்த வர் செந்தில்குமார் (35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோமதி.

    இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக கோமதி ஆலாம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். இதனால் செந்தில்குமார் மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண் எண்ணையை ஊற்றி தீ பற்றவைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார்.

    அப்போது சத்தம் போட்டு துடித்த செந்தில்குமாரை அக்கம் பக்கத்து வீட்டினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சிகிச்சையில் இருந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

    இறந்த செந்தில்கு மாருக்கு பவித்ரன், கோகுல் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×