என் மலர்
நீங்கள் தேடியது "husband refuses"
கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை எழுமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைப்பாண்டி மனைவி பாரதி (வயது 28). பிச்சைப்பாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இந்த நிலையில் பிச்சைப்பாண்டி சமீபத்தில் மனைவியிடம் நான் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தாராம். அதன்படி கடந்த 4 மாதங்களாக குடிக்காமல் இருந்து வந்தார். திடீரென்று பிச்சைப்பாண்டி சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாரதி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






