search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human bomb"

    • அ.தி.மு.க.வை பாதுகாக்க தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்று மதுரை ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பேசினர்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் விஸ்வரூபம் எடுப்போம் என்பதை ஆளும் தி.மு.க.வுக்கு சவாலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மறு வடிவமாக திகழ்ந்து வருகிறார்.

    அவரது தலைமையில் இன்று அ.தி.மு.க. இயக்கம் ஒன்று பட்டுவிட்டது. இனி யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. அவர் தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக விரைவில் வருவார். அந்த நம்பிக்கை மக்கள் மன்றத்தில் பரவலாக ஏற்பட்டுள்ளது.

    எடப்பாடியார் மதுரைக்கு வரும் போதெல்லாம் மக்கள் எழுச்சி அதிகரித்து வருகிறது. இதை பொறுக்க முடியாத தி.மு.க. பொய் வழக்கை பதிவு செய்துள்ளது.

    உடனடியாக எடப்பாடி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து வீதிக்கு வந்து இந்த அரசை தூக்கி எறியும் வரை போராடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    கடந்த 11-ந் தேதி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மக்கள் எழுச்சி பயணத்தை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் தொடங்கினார். இந்த எழுச்சி பயணத்தின் வெற்றியை தடுக்க தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. தொடக்கம் முதலே போலீசார் நிகழ்ச்சி களுக்கு அனுமதி தராமல் மறுத்துவிட்டனர்.

    நீதிமன்றத்தில் முறையிட்டு பட்டா நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றோம். அதே நேரத்தில் தி.மு.க.வின் பி. டீம் என்று அழைக்கப்படும் சில துரோகிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அங்கு போலீசார் அனுமதி அளித்தனர். இது எந்த வகையில் நியாயம்?.

    அ.தி.மு.க. இயக்கத்தை எப்படியாவது அழித்து விடலாம். ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

    எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. வலுவோடும் பொலி வோடும் செயல்பட்டு வருகிறது. மக்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக எடப்பாடி யாரை கொண்டு வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    ஆனால் ஒரு பொய்யான வழக்கை மனசாட்சியின்றி தி.மு.க. அரசு இன்றைக்கு அவர் மீது போட்டுள்ளது.யாரோ பெயர் தெரியாத, விலாசம் தெரியாத ஒருவர் கொடுத்த புகாரை ஏற்று எடப்பாடியார் மீது பொய் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். யார் சொல்லி இவர்கள் வழக்கு போட்டார்கள்? என்றெல்லாம் எங்களுக்கு தெரியும்.

    இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க.வை பாதுகாக்க ஒவ்வொரு தொண்டனும் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அரசு அ.தி.மு.க.வை சீண்டிப்பார்க்க வேண்டாம்.பழிவாங்க நினைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ததன் காரணமாக மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. இன்றைக்கு ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இதை நாம் மதுரை மண்ணில் இருந்து கண்டிக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்காகத்தான் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது இங்கே திரண்டிருக்கிறோம். அ.தி.மு.க. இயக்கம் சாதாரண இயக்கமல்ல. இந்த இயக்கம் தொண்டர்களால் கட்டுக்கோப்பாக கட்டமைக்கப்பட்டதாகும்.

    இந்த இயக்கத்தை அழித்து விடலாம். ஒழித்து விடலாம் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்யான புகாரை கொண்டு வழக்குப்பதிவு செய்கிறார். எடப்பாடி பழனிசாமியும் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வராக இருந்து மு.க. ஸ்டாலின் மீது எந்த பொய் வழக்கையாவது போட்டாரா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    ஆளுகின்ற மமதையில் ஸ்டாலின் இதுபோன்று பொய் வழக்குகளை போட்டு வருகிறார். தி.மு.க.வுக்கு தமிழ்நாடு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும் விரைவில் மக்கள் உங்களை மாற்றுவார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நீங்கள் செய்தது போல இனி செய்ய முடியாது. அப்போது உங்கள் நிலைமை எப்படி ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள். அ.தி.மு.க. இயக்கம் ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கும் இயக்கமாகும். இது தேன்கூடு. இந்த தேன்கூட்டில் கம்பை வைத்தால் என்னவாகும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க.வை சீண்டி பார்ப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவேற்றுங்கள். மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துங்கள் என்று எச்சரிக்கை கடமைப்பட்டுள்ளோம். இனிமேலும் அ.தி.மு.க. தலைவர்கள் மீதும், அ.தி.மு.க. மீதும் காவல்துறையை கொண்டு பொய் வழக்கை போட நினைத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் விஸ்வரூபம் எடுப்போம் என்பதை ஆளும் தி.மு.க.வுக்கு சவாலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×