search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hot season decreases"

    • இளநீர் கடை அதிக அளவில் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
    • விலை குறையாமல் அதே 40 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விழைய கூடிய தேங்காய் மற்றும் இளநீரை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி வந்து வார சந்தைகளிலும், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு தேங்காய் விற்பனை செய்து வருகின்றார்கள்.

    இந்த நிலையில் வெயில் காலங்களில் இளநீர் விற்பனை தொடங்கி தற்போது வெயில் காலம் குறைந்தும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ரவுண்டானா பகுதிகளில் இளநீர் கடை அதிக அளவில் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

    இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    வெயில் காலங்களில் இளநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்த படியால் 50 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்ப ட்டது. தற்போது வெயில் காலம் குறைந்து குளிர்ந்த காற்றும், வெயிலின் தாக்கம் குறைந்தும் இருக்கும் நிலையில் மருத்து வர்கள் அறிவுறு த்தலின்படி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்ப ட்டிருக்கும் நோயாளி களுக்கும் மற்றும் கோ வில்களில் அபிஷேகங்களுக்கும் தற்போது இளநீர் வாங்கி செல்கின்ற னர்.

    இன்னும் விலை குறையாமல் அதே 40 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது.

    இதனை வியாபாரிகள் விவசாய இடத்தில் எடுத்துக் கூறி அங்கு விலையை சற்று குறைத்து வாங்கி பொது மக்கள் விற்பனை செய்யும் விலையும் சிறிது குறைத்தால் தற்போது இருக்கும் காலகட்ட சூழ்நிலைக்கு சிரமம் இன்றி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

    ×