search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holy communion"

    கேரளாவில் நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு நகரின் தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. #NipahVirus #Kerala #holycommunion #Thamarasserydiocese

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு நகரின் தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் சார்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கையில், கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் ரொட்டி மற்றும் திராட்சை ரசம் ஆகியவை கொண்ட நற்கருணையானது நாக்கில் கொடுப்பதற்கு பதிலாக அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அதோடு ஞானஸ்நானங்கள், கிரகபிரவேசங்கள், திருமணங்கள் மற்றும் ஜெப கூட்டங்கள் ஆகியவற்றையும் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்கள், பொது கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இறை நம்பிக்கையாளர்கள் நிபா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கவும், மாநில அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார். #NipahVirus #Kerala #holycommunion #Thamarasserydiocese
    ×