search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hoarding 850 kg"

    • ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டும், வாகன சோதனையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

    இந்த சோதனையில் ரேஷன் அரிசியை கடத்திய வர்கள் கைது செய்யப்படும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்ப ட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (27), பிரகாஷ் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து சூர்யா, பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற த்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×