search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High quality lighting"

    • சோழன் நகர் பிரதான சாலையை செப்பனிட்டு புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்.
    • உணவுக் கடைகளில் சோதனை நடத்தி தரமற்ற உணவு பொருள்கள் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.இதற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் முன்னதாக இன்றுடன் பணி நிறைவு பெறும் மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ்க்கு அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.இந்த கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி பேசுகையில்: 51-வது வார்டு ஆலமரப் பகுதியில் பஸ் நிழற்குடை மற்றும் எல்.இ.டி. உயர் தர விளக்கு அமைத்திட நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்ற மாமன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது.மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி: கொண்டி ராஜபாளையம் ரவுண்டானா மீன் மார்க்கெட் சீரமைக்க வேண்டும். தற்போது கீழவாசலில் இடித்து கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.கவுன்சிலர் மேத்தா: அரண்மனை வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசுகையில்: தஞ்சையில் ஒரே இடத்தில் நகைக்கடைகள் அமைய உள்ளது. இதேபோல் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் ஒரே இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும். சில ஓட்டல்களில் தரமற்ற சிக்கன் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்கள் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உணவுக் கடைகளில் சோதனை நடத்தி தரமற்ற உணவு பொருள் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சி கொறடா கோபால் : தஞ்சை தெற்கு வீதி உள்ளிட்ட 4 வீதிகளில் கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும்.எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யு.என்.கேசவன்: மழைக்காலம் வரவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக மழைநீர் நாள் கணக்கில் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் ஜெய்சதீஷ் : விஜயமண்டப தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்க வேண்டும்.

    சோழன் நகர் பிரதான சாலையை செப்பனிட்டு புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும். சேவியர் நகர் விநாயகர் கோவில் வலது புறம் உள்ள தெருவில் குடிநீர் பிரதானக் குழாய் அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மேயர் சண் ராமநாதன் பதில் அளித்து பேசியதாவது :-உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து உரிய நடவடிக்கைஎடுக்க ப்படும். தஞ்சை மாந கராட்சி எல்லைக்குஉட்பட்ட ஆற்றுபாலம், ராஜரா ஜன்சோழன் சிலை, சி.ஆர்.சி.டெப்போ, மேம்பாலம் இறக்கம், ராமநாதன் மருத்து வமனை , பழைய வீட்டு வசதி வாரியம், குழந்தை இயேசு கோவில், தொல்காப்பியர் சதுக்கம், வெள்ளைப் பிள்ளையார் கோவில் ஆகிய ரவுண்டானாக்கள் சிறப்பாக பராமரித்து அழகுப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ×