search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hen murder case"

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கோழியை கொன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #henmurdercase
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா வால்மிகி என்ற பெண் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். அவர் கோழிகளில் ஒன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளது. இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கோழியை விரட்டியளித்துள்ளார்.

    இதற்கிடையில், ஒருநாள் தன் வீட்டிற்குள் வந்த கோழியை குச்சியால் அடித்து, அதனை கொன்றார். இதனை அறிந்ததும் சுனிதா அவர் வீட்டிற்கு வந்து நியாயம் கேட்டார். ஆனால் அந்த வீட்டில் இருந்த அனைவரும் சுனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த சுனிதா போலீசாரிடம் புகார் அளித்தார். தனக்கும், தன் மகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 429-ன் படி 50 ரூபாய் மதிப்புக்கு அதிகமாக உள்ள உயிரினத்தை கொல்லுவது தண்டனைக்குரிய குற்றமாகும். #henmurdercase

    ×