என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy rain in Yercaud"

    • கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • இதை ஒட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதை ஒட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. ஏற்காட்டில் மாலை 5 மணிக்கு சாரல் மழையாக பெய்ய தொடங்கியது.

    பின்னர் 4 மணி நேரம் கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மழையை தொடர்ந்து ஏற்காட்டில் ஏழு மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் அதிகாலை ஒரு மணி அளவில் தான் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஏற்காடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    சேலம் மாநகரில் இரவு 8 மணி அளவில் மழை பெய்தது மாணவரில் அஸ்தம்பட்டி கொண்டலாம்பட்டி அம்மாபேட்டை ஜங்ஷன் உள்பட அனைத்து பகுதிகளிலும் பெய்த மழையால் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது எடப்பாடி மற்றும் கவுண்டம்பட்டி பல்லாண்டு வலசு வெள்ளநாயக்கன்பாளையம் வீரப்பம்பாளையம் நாச்சிபாளையம் கொங்கணாபுரம் புதுப்பாளையம் தாதாபுரம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரம் கனமழை பெய்தது இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காடையாம்பட்டி 20, பெரிய கோவில் 19, சேலம் 14, ஆனை மடுவு 12, வீரகனூர் 11, பெத்தநாயக்கன்பாளையம் ஏழு, தம்மம்பட்டி ஆறு, ஆத்தூர் 5.4, ஓமலூர் 4.6, எடப்பாடி ஒன்று புள்ளி நான்கு மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 168.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்றும் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    ×