search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hate Speach"

    • வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுப்பதில் தொகுப்பாளரின் பங்கு முக்கியமானது என நீதிபதிகள் கருத்து
    • இந்த வழக்கில் நீதிமன்றத்தின் ஆலோசராக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே நியமனம்

    புதுடெல்லி:

    தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்பில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் வாதாடும்போது, இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் தேசிய ஒலிபரப்பாளர் சங்கத்தை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெறுப்பு பேச்சு தொடர்பாக பல்வேறு கருத்துகளை கூறினர்.

    'வெறுப்பு பேச்சு என்பது பிரதான ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் கட்டுப்பாடற்ற முறையில் உள்ளது. இதில் வெறுப்பு பேச்சுக்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுப்பதில் தொகுப்பாளரின் பங்கு முக்கியமானதாகும். நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்பு பேச்சை உமிழாமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

    வெறுக்கத்தக்க பேச்சு காட்சி ஊடகம் மூலமாக இருப்பதால், டிவி செய்தி சேனல்களைப் பற்றி நாங்கள் குறிப்பிடுகிறோம். செய்தித்தாள்களில் எழுதப்பட்டதை யாரும் பொருட்படுத்துவதில்லை, ஏனெனில் மக்களுக்கு படிக்க நேரம் இல்லை.

    வெறுப்பு பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும் தொலைக்காட்சி சேனல்கள் எந்தவித தடைகளும் இன்றி தப்பி விடுகின்றன. இந்த விஷயத்தில் அரசு இன்னும் மவுனமாக இருப்பது ஏன்?. வெறுப்பு பேச்சுகளை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்'' என நீதிபதிகள் கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கில் நீதிமன்றத்தின் ஆலோசராக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவை உச்ச நீதிமன்றம் நியமித்ததுடன், மனுக்கள் மீதான பதில்களைத் தொகுக்குமாறு கேட்டுக் கொண்டது.

    ×