search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hans tobacco products trapped"

    • கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
    • ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் போலீசார் வடக்கு பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வடக்கு பேட்டை மார்க்கெட் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ஒவ்வொரு கடையாக சோதனை செய்தனர். அப்போது ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும்படியாக சிறிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    அவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது சத்தியமங்கலம் வடக்குப்பட்டி பகுதியை சேர்ந்த ஆசாராம் (32)என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவருக்கு உதவியாக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் அதே பகுதியில் உள்ள மற்றொரு கடைக்கு போலீசார் சென்றபோது கடையின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். போலீசை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார்.

    அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி(48) என்பதும், பையை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ ஹான்ஸ், புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இவருக்கு உதவியாக இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேட்டன் என்பவரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×