என் மலர்

  நீங்கள் தேடியது "hangovers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடல் நல குறைவால் ராமதாஸின் மனைவி இறந்தார்.
  • காதல் மனைவி இறந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

  விழுப்புரம்:

  திருவெண்ணைநல்லூர் அருகே மாமண்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் ராம தாஸ் (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் உடல் நல குறைவால் ராமதாஸின் மனைவி இறந்தார். பின்னர் ராமதாஸ் காதல் மனைவி இறந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும் ஒரு வயது குழந்தையை வைத்து தனியாக பராமரித்து சரிவர பார்த்துக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்தார். நேற்று ராமதாஸ் தனது ஒரு வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு அதே பகுதியில் ஏரிக்கரையில் உள்ள ஆல மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×