search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gunanidhi"

    • எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அலங்கு’.
    • இந்த படத்தில் குணாநிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'அலங்கு'. இந்த படத்தில் குணாநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சவுந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    டி.சபரிஷ் , எஸ்.ஏ. சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜீஷ் இசையமைக்க எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.


    'அலங்கு' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி, அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படக்குழு நடத்தி முடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தில் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்ததும் இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

    எ ஸ்ட்ரோக் ஆஃப் டிசொணென்ஸ் என்ற குறும்படத்தை பார்த்த கமல்ஹாசன், அப்படத்தின் கதாநாயகன் குணாநிதியை பாராட்டியிருக்கிறார். #AStrokeofDissonance
    திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் ஒரு குறும்படம் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. "பதநிச கம்யூனிகேஷன்ஸ்" தயாரிப்பில் ராம்போ நவாகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த குறும்படத்தின் பெயர் "எ ஸ்ட்ரோக் ஆஃப் டிசொணென்ஸ்".

    ஒரு இசைக்கலைஞனின் கதையாக, 25 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் ஒரே ஒரு நடிகர் மட்டுமே நடித்துள்ளார். தன் நடிப்பால் இசைக்கலைஞனை அப்படியே கண்முன் நிறுத்தும் அந்த ஒற்றை நடிகர், குணாநிதி.

    இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கிராபிக்ஸ் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ள இந்த குறும்படத்தைப் பார்த்து, கலைஞானி கமல்ஹாசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் விக்ரமன், இயக்குநர் சீனு ராமசாமி உட்பட பல திரையுலக பிரபலங்கள் படத்தையும் படத்தில் நடித்துள்ள குணாநிதியையும் பாராட்டியுள்ளனர்.

    இந்த குறும்படம் பரபரப்பாக பேசப்படுவதைத் தொடர்ந்து விரைவில் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் குணாநிதி.
    ×