search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GT Devegowda"

    கர்நாடகா மாநிலம், மைசூருவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் போது மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த மந்திரி ஜி.டி. தேவகவுடா கால் தடுக்கி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #GTDevegowda
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா விழா கடந்த 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு  விதமான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவகவுடா, தொடங்கி வைத்தார்.

    அப்போது, போட்டியில் பங்கேற்றவர்களுடன் சேர்ந்து அவரும் ஓடினார். ஆனால், சில நிமிடங்களிலேயே நிலை தடுமாறிய அவர் திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார்.

    பின்னர் அருகே இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து அவருக்கு கை கொடுத்து எழுப்பினார்கள். மந்திரி ஒருவர் கீரே விழுந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. #GTDevegowda
    குதிரை பேரத்தில் 200 கோடி ரூபாய் கொடுத்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள் என தேவேகவுடா தெரிவித்துள்ளார். #KarnatakaCMrace #Devegowda
    ஐதராபாத்:

    கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நாளை மாலை 4 மணிக்கு நிரூபிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஐதராபாத் நகரில் முகாமிட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேரும் பெங்களூரு புறப்படுகின்றனர்.



    மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. 100 கோடி ரூபாய்வரை பேரம் பேசுவதாகவும், மந்திரி பதவிகளை அளிப்பதாக கூறி ஆசைகாட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், ஐதராபாத் நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கவுடா, ‘100 கோடி அல்ல, 200 கோடி கொடுத்தாலும் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள். அவர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை அதிகாலை நாங்கள் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். #KarnatakaCMrace #Devegowda
    ×