search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grocer who"

    • பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • போலீசார் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் தினசரி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது.

    இதில் ஜோதிகமலம் என்பவர் தினசரி சந்தையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் நகராட்சி நிர்வாகத்துக்கு வாடகை நிலுவை தொகை வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் வாடகை நிலுவை தொகை வசூலிப்ப தற்காக ஜோதி கமலம் என்பவரின் கணவர் ரவிச்சந்திரன் நடத்தி வரும் நகராட்சிக்கு சொந்தமான மளிகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழி யர்கள் சென்றனர்.

    அப்போது தினசரி சந்தைக்கு நிலுவை தொகை உள்ளதால் இந்த மளிகை கடையை பூட்டி சீல் வைக்க போகிறோம் என அதிகாரிகள் அவரிடம் கூறினர்.

    இதற்கு ரவிசந்திரன் அதிகாரிகளிடம் என் பெயரில் உள்ள கடைக்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறேன். தினசரி சந்தை வாடகை நிலுவை பாக்கி தொகைக்கும் இந்த கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    இது பற்றி ஏன் முன்கூட்டியே நோட்டீசு வழங்க வில்லை. தினசரி சந்தை வாடகை பாக்கி தொகை வைத்துள்ள ஜோதி கமலத்துக்கு வேண்டும் என்றால் நோட்டீசு வழங்குகள்.

    ஆனால் இந்த கடையை சீல் வைக்க அனுமதிக்க மாட்டேன் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ரவிசந்திரன் திடீரென பிளாஸ்டிக் டப்பாவில் தான் வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற கடைகாரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்து திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×