என் மலர்
நீங்கள் தேடியது "Government school team wins"
- டை-பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது.
- பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி, சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் இறுதி போட்டியில், செஞ்சுரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து விளையாடினர்.ஆட்ட முடிவில்இரு அணியினரும் தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தனர். இதையடுத்து டை-பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது.இதில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.வெற்றி பெற்ற அணிக்காக விளையாடிய மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் ஆகியோருக்கு தலைமையாசிரியர் அப்துல்காதர், உதவி தலைமையாசிரியர்கள் மூர்த்திராஜன், செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.






