search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gladiator"

    • எலான் மஸ்க் தனது ஐடியின் முகப்பு படத்தையும் மாற்றியுள்ளார்.
    • கெகியஸ் எனும் மீம் நாணயத்தின் மதிப்பு 500% அதிகரித்துள்ளது.

    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

    டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

    இந்நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் ஐடியின் பெயரை 'கெகியஸ் மாக்சிமஸ்' என்று மாற்றம் செய்துள்ளார். மேலும் தனது ஐடியின் முகப்பு படத்தையும் மாற்றியுள்ளார். பெபே தவளை மீமில் வரும் புகைப்படத்தை முகப்பு படமாக அவர் வைத்துள்ளார்.

    எதற்காக எலான் மஸ்க் இந்த மாற்றத்தை செய்துள்ளார் என்று தெரியவில்லை. அதே சமயம் இந்த மாற்றத்திற்கு பிறகு கெகியஸ் எனும் மீம் நாணயத்தின் மதிப்பு 500% அதிகரித்துள்ளது. இணையத்தில் வைரலாக மீம்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் மீம் நாணயங்கள் கிரிப்டோ கரன்சி வகையை சார்ந்தது ஆகும்.

    2000 ஆம் ஆண்டு வெளியான கிளாடியேட்டர் திரைப்படத்தின் நாயகனின் பெயர் மாக்சிமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1977 ஆம் ஆண்டு தி டியூவலிஸ்ட் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
    • 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்கார் தற்போது உருவாக்கியுள்ளார்.

    அமெரிக்காவில் சை ஃபை , கிரைம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கதைகளை இயக்கும் திறமைவாய்ந்த இயக்குனர் ரிட்லி ஸ்காட். 1977 ஆம் ஆண்டு தி டியூவலிஸ்ட் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.

    ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.

    மேலும், இது ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. போர்க்கள காட்சிகளுக்கு இன்றளவும் முன்னோடியாக இப்படம் விளங்குகிறது. தற்போது வெளியான 'கேம் ஆப் திரோன்ஸ்' மற்றும் 'பாகுபலி' போன்ற படங்களிலும் இந்த படத்தின் தாக்கத்தை காண முடியும். ஆனால் ரிட்லி ஸ்காட் 2000- ஆண்டிலேயே அப்பேற்ப்பட்ட படைப்பை படைத்தது இன்றும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

    கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்கார் தற்போது உருவாக்கியுள்ளார். இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. பால் மெஸ்கல் மற்றும் பெட்ரோ பாஸ்கல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம், வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், ஐரோப்பிய திரையரங்குகளிலும் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நவம்பர் 22-ந் தேதி அமெரிக்காவிலும் வெளியாகிறது. இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×