search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girama Uthayam"

    • கோபால சமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி செந்தில் முரளி நன்றி கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் சார்பில் கோபால சமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் மகேஷ்வரி வரவேற்று பேசினார். ஆலோசனை குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங், பகுதி பொறுப்பாளர்கள் ஜெபமணி, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி செந்தில் முரளி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் சார்பாக மனுஅளிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.

    ×