search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ghaziabad High Court"

    • பல பிரிவுகளில் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது
    • சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தெருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

    இந்திய தலைநகர் புது டெல்லியின் நோய்டா (Noida) பகுதியில் உள்ள நிதாரி (Nithari) கிராம பகுதியில், கடந்த 2006 டிசம்பர் மாதம், ஒரு வீட்டின் வெளியே உள்ள வடிகால் பாதையில் பல எலும்பு கூடுகளை பொதுமக்கள் கண்டனர். இது குறித்து உடனடியாக அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

    பொதுமக்கள் அளித்த புகாரை அளித்து, காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

    அந்த வீட்டை காவல்துறையினர் மேலும் ஆய்வு செய்யததில் பல குழந்தைகளின் உடல் பாகங்கள் கிடைத்தன. அந்த பகுதியின் சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த பல சிறுவர் சிறுமியர் உடல்கள் அவை என்றும் தெரிய வந்தது.

    மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு காவல்துறையிடமிருந்து மத்திய புலனாய்வு துறையிடம் (CBI) ஒப்படைக்கப்பட்டது. அந்த வீட்டின் வேலைக்காரன் சுரிந்தர் கோலி (Surinder Koli) மற்றும் மொனிந்த சிங் பந்தெர் (Moninder Singh Pandher) ஆகியோர் அந்த குழந்தைகளை கடத்தி, தகாத உறவில் ஈடுபட்டு, அவர்களை கொன்றதாக சிபிஐயின் தீவிர விசாரணையில் தெரிய வந்தது.

    ஆதாரத்தை மறைக்க அக்குழந்தைகளின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியதாக கோலி தெரிவித்தான். குற்றத்தை ஒப்பு கொண்ட கோலி, உயிரிழந்தவர்களின் உடல்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அவர்களின் உடல் பாகங்களை உண்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

    பல பிரிவுகளில் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இறுதியாக அவர்கள் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    இதனை எதிர்த்து அவர்கள் செய்த மேல்முறையீட்டு வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், நாட்டையே உலுக்கிய 17 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குற்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம், போதுமான ஆதாரம் இல்லாததால், அவர்கள் இருவரையும் அனைத்து வழக்கிலிருந்தும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.

    ×