என் மலர்
நீங்கள் தேடியது "gayatri rahuram"
- 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் குறித்து திரைபிரபலங்கள் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காயத்ரி ரகுராம்நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

காயத்ரி ரகுராம் - சூர்யா
இப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பல திரைபிரபலங்களும் படம் குறித்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராக்கெட்ரி படத்தை பார்த்த காயத்ரி ரகுராம் தனது சமுக வலைத்தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியர் இல்லையா? இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமையாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பல விவாதங்களை கிளப்பி உள்ளது.
ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா? pic.twitter.com/7FBw0urTMO
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) July 5, 2022






