என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas stoves"

    • பழுதான எரிவாயு அடுப்புகளை சரி செய்ய சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • இண்டேன் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுவரும் இண்டேன் எரிவாயு அடுப்புகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய நாளை (23-ந் தேதி) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இண்டேன் நிறுவனத்தின் சார்பில் 13 விநியோகஸ்தர்களும் அவர்களின் கீழ் சுமார் 3 லட்சம் எரிவாயு இணைப்புகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர். இந்த எரிவாயு இணைப்புகளின் மூலம் பயன்படுத்திவரும் அடுப்புகள் மற்றும் அதன் குழாய்கள் அதிக பயன்பாட்டின் காரணமாக பழுதடைந்திருக்கும் நிலையில் அதனை பயன்படுத்துவது ஆபத்து அதிகம் இருப்பதால் ''பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்'' நடக்கிறது.

    இந்த முகாம் இண்டேன் நிறுவனத்தின் சார்பில் நாளை (23-ந் தேதி) சிவகங்கை- திருப்பத்தூர் சாலையில் பழைய நீதிமன்றம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெறுகிறது. இதில் 13 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பழுதடைந்த எரிவாயு அடுப்புகளை சரி செய்யவும் அல்லது பழைய அடுப்பை பெற்றுக்கொண்டு புதிய அடுப்புகள் வழங்கப்பட உள்ளது.மேலும் புதிதாக பாதுகாப்புடன் கூடிய டியூப்புகளும் வழங்கப்பட உள்ளன.

    இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், இண்டேன் மாவட்ட பொது மேலாளர் ரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.இதனை இண்டேன் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பகுதி அலுவலர் மிருதுவாசினி தெரிவித்துள்ளார்.

    ×