search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gangaikondan"

    • பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை முதலாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர்
    • அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது

    நெல்லை:

    நெல்லை பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை முதலாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர்(வயது 53). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கங்கை கொண்டானில் உள்ள மான்கள் சரணாலயம் அருகே ஒரு கட்டிடத்தில் பெயிண்டிங் வேலைக்காக சென்றிருந்தார். அப்போது வேலையை முடித்துவிட்டு இரவில் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்கு குறுக்காக நடந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்படட ஷேக் அப்துல் காதர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த ஷேக் அப்துல் காதர் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளம் செல்கிறது.
    • ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லை-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் மோதி பெண் இறந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளம் செல்கிறது.

    இந்த பாதையில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மூதாட்டியின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த மூதாட்டி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அந்த மூதாட்டி ஆலடிப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி எமிலி ரத்தினபாய்(வயது 52) என்பது தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை கிடையாது என்பதால், எமிலி ரத்தினபாய் அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கும் வயது முதிர்வின் காரணமாக தடுமாறி நடந்துள்ளார்.

    இந்தநிலையில் அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

    ×