என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandhi Stadium"

    • மாவட்ட அளவிலான விளையாட்டு, உடற்தகுதி மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு நிலை ஆலோசனைக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
    • சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் பயிற்சி நேரம் காலை 5 மணி முதல் 9 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ள நேரங்களில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்திட அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட அளவிலான விளையாட்டு, உடற்தகுதி மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு நிலை ஆலோசனைக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கபாடி விளையாட்டு போட்டிகள் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் விரைவில் தேதி அறிவிக்கப்பட்டு நடத்திடவும், அனைத்து விளையாட்டுகளும் பொது பிரிவினர், பள்ளி மாணவ-மாணவியர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய அனைத்து பிரிவினருக்கும் தனித்தனியாக நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வருங்காலங்களில் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு ஆன்லைனில் எ www.sdat.tn.gov.in ன்ற இணையதளம் மற்றும் TNSPORTS. செயலியில் விபரங்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

    கிராமப்புறங்களில் திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களின் நன்மைக்காக விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடு செய்யவும், அனைத்து விளையாட்டுகளுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்தி அதன்மூலம் பொது மக்களுக்கு விளையாட்டினால் ஏற்படும் பயன்கள் குறித்து உரிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சர்வதேச அளவில் விளையாடும் அளவிற்கு உடல்திறன் தகுதியினை மேம்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

    சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் பயிற்சி நேரம் காலை 5 மணி முதல் 9 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ள நேரங்களில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்திட அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி,மாவட்ட விளையாட்டு அலுவலர்சிவரஞ்சன், சைகிளிங் சங்க மாவட்ட தலைவர் நாசர்கான் (எ) இமான் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.    

    • பா.ம.க. வலியுறுத்தல்
    • பல இன்னல்களுக்கு ஆளாகி மிக சிறிய மண் தரை மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு மற்றும் விளையாட்டு துறை சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் சர்வதேச தரம் வாய்ந்த செயற்கை புல் ஹாக்கி மைதானம் 2004 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    செயற்கை புல் ஹாக்கி மைதானத்தின் ஆயுட்காலம் என்பது 7 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு மைதானம் புதுப்பிக்க படாத காரணத்தினால் விளையாட்டு வீரர்கள் அதே மைதானத்தில் விளையாடி வந்தனர்.

    ஆனால் தற்போது ஹாக்கி மைதானம் மிகவும் சேதமாகி உள்ளதால் விளையாட்டு வீரர்கள் சரியான முறையில் பயிற்சி பெற முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி மிக சிறிய மண் தரை மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    மேலும் புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் போட்டிக்கு தயாராக ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3000 முதல் 5000 வரை செலவு செய்து சென்னை போன்ற நகரங்களில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தை வாடகை எடுத்து பயிற்சி செய்கின்றனர்.

    ஹாக்கி விளையாடும் வீரர்களுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்துகின்றது. இதனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக ஹாக்கி மைதானத்தை சீர்படுத்தி தரவும் மேலும் அதனை தகுதி வாய்ந்த ஊழியர்களை கொண்டு பராமரிக்கவும், செப்பனிடவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×