என் மலர்
நீங்கள் தேடியது "Gandhi Shilp Bazaar"
- மதுரையில் காந்தி சில்ப் பஜார் விற்பனை கண்காட்சி நடந்தது.
- இலவச அனுமதியுடன் கூடிய இந்த கண்காட்சியில் தினசரி கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல் விளக்கமும் நடைபெறுகிறது.
மதுரை
மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் அகில இந்திய கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
மதுரையில் இந்திய ஜவுளி துறை, மற்றும் மதுரை "பெட்கிராட் நிறுவனம் இணைந்து 'காந்தி சில்ப் பஜார்' 10 நாட்கள் நடைபெறும் அகில இந்திய கைவினைப் பொருட்களின் விற்பனை கண்காட்சி ராஜா முத்தையா மன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார்.
கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணைய மண்டல இயக்குனர் பிரபாகரன், நாகர்கோவில் காதி கிராப்ட் சேவை மைய உதவி இயக்குனர் ரூப் சந்தர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் காளிதாசன், "பெட்கிராட்" நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு அலுவலர்கள் பிரிட்ஷுதா, ரேவதி, சுனில், மகளிர் உதவி திட்ட அலுவலர் வெள்ளப்பாண்டி மற்றும் "பெட்கிராட்" நிர்வாகிகள் சுருளி, அங்குசாமி, கிருஷ்ணவேணி, சாராள் ரூபி, சுசிலா குணசீலி, மார்ட்டின் லூதர்கிங், ராஜசேகரன், இந்திரா, பயிற்சியாளர்கள் விஜயகுமார், விஜய வள்ளி, முத்துச்செல்வி, ஈஸ்வரி, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த அனைத்து கைவினைக் கலைஞர்கள் தயார் செய்த பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
கண்காட்சியில் 100 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கண்ணாடி பொம்மைகள், மண்பாண்டங்கள், வேலைப்பாடுடன் கூடிய மரச்சிற்பங்கள், சணல் பொருட்கள், பிரிண்டிங் துணி வகைகள், செயற்கை ஆபரண நகைகள், சுங்குடி சேலைகள், ஓலை மற்றும் நார் பொருட்கள், தஞ்சாவூர் கார்பெட்கள், சங்கு பொருட்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இலவச அனுமதியுடன் கூடிய இந்த கண்காட்சியில் தினசரி கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல் விளக்கமும் நடைபெறுகிறது. மேலும் தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தினசரி பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்படுகிறது. இந்த மாபெரும் கண்காட்சியை கண்டுகளித்து பயன் பெறும் வகையில் இந்திய ஜவுளித்துறை மற்றும் "பெட்கிராட்" நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.






