என் மலர்
நீங்கள் தேடியது "four civilians injured"
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். #civiliansinjured #Pakfiring #LoCfiring
ஸ்ரீநகர்:
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளின்மீது அத்துமீறலாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாரமுல்லா மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருபெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #civiliansinjured #Pakfiring #LoCfiring






