என் மலர்
நீங்கள் தேடியது "formers issues"
விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி ஒன்றும் தெரியாமல், அவர்களது பெயரில் அரசியல் செய்து வருகிறார் ராகுல் காந்தி என பாஜக எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். #VirendraSinghMast #FormersIssues #RahulGandhi
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பாதோஹி தொகுதி பாஜக எம்பியாக இருந்து வருபவர் வீரேந்திர சிங் மஸ்த். இவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு செடிகளின் வகைகல் பற்றியே ஒன்றும் தெரியாது. அவர் எப்படி விவசாயிகளின் பிரச்சனைகளை அறிவார்?

ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி அறியாமல். அவர்களது பெயரால் அரசியல் செய்து வருகிறார். நமது நாட்டு விவசாயம் என்பது புத்தகத்தை படித்து தெரிந்து கொள்வதன் மூலம் வருவதல்ல.
இந்தாண்டு பட்ஜெட்டில் முதல் முறையாக வேளாண் துறைக்காக 52 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சியே அமையும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார் என தெரிவித்துள்ளார். #VirendraSinghMast #FormersIssues #RahulGandhi






