search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former DSP"

    காஷ்மீர் செக்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) துணை ஐ.ஜி. பதி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #JammuKashmir #DIGBSF
    சண்டிகர்:

    காஷ்மீரில் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி, உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கிய சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு மாநில அரசில் மிகப்பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சாதாரண போலீசார் முதல் மந்திரிகள் வரை பலரது பெயர்கள் அடிபட்டன. இந்த செக்ஸ் ஊழலில் அப்போதைய முதல்-மந்திரி உமர் அப்துல்லாவின் பெயரும் அடிபட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் என்.என்.வோரா நிராகரித்தார்.

    உயர் அதிகாரிகள் உள்பட 56 பேரை இந்த வழக்கில் சேர்த்து போலீசார் விசாரித்து வந்தனர். மாநிலத்தில் உயர்மட்ட அளவில் நடந்த இந்த செக்ஸ் ஊழலை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணையை சண்டிகருக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) துணை ஐ.ஜி. பதி, மாநில போலீஸ் துணை சூப்பிரண்டு முகமது அஷ்ரப் மிர் உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ககன்ஜீத் கவுர் தீர்ப்பு வழங்கினார். மேலும் பதி, மிர் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 
    ×