என் மலர்
நீங்கள் தேடியது "former cm shankersinh vaghela"
குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி ஷங்கர் சின்ஹ் வகேலா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். #ShankersinhVaghela
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் 12வது முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷங்கர் சின்ஹ் வகேலா. இவர் 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1997-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை குஜராத் முதல் மந்திரியாக பதவி வகித்தார்.
பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ஷங்கர் சின்ஹ் வகேலா தனது எம்.எல்.ஏ. பதவியை 16.8.17 அன்று ராஜினாமா செய்தார்.

அதன்பின்னர், அகில இந்திய ஜன் விகல்ப் மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கி 95 இடங்களில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி ஷங்கர் சின்ஹ் வகேலா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். #ShankersinhVaghela






