என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for Rs.9.48 lakhs"

    • கொடுமுடி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் விடுதிகள் கழிப்பறைகள் ரூ.9.48 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
    • ஏலத்தில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் விடுதிகள் கழிப்பறைகள் ரூ.9.48 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.

    பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணி தலைமையில், துணைத் தலைவர் கமால்ஹசன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றன.

    பஸ் நிலைய கடைகள் ரூ.3.36 லட்சத்திற்கும், பஸ் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதி ரூ.2.08 லட்சத்திற்கும், மகுடேஸ்வரர் கோவில் கழிப்பிட கட்டிடம் ரூ.1.72 லட்சத்திற்கும், தினசரி மார்க்கெட் கடைகள் ரூ.1.72 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டன.

    மீதி உள்ள கடைகள் மற்றும் பஸ் நிலைய நுழைவுக் கட்டண வசூல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டன. ஏலத்தில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    ×