search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for free saplings"

    • விவசாயிகள் பதிவு செய்து முன்னுரிமை அடிப் படையில் பெற்றுக் கொள்ளலாம்.
    • ஹெக்டே ருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் வழங்கப்படும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் மைத் துறை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாது:-

    தமிழகத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படிகோவை மாவட்டத்தில்நடப்பு ஆண்டு 3 லட்சம் மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மரம், வேங்கை, மலை வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், மகாகனி, தேக்கு, கடம்ப மரம் உள்ளிட்ட மதிப்பு மிக்க மரக்கன்றுகள் வழங்கப்படும். இந்த மரக்கன்றுகள் தோட்ட க்கலைத் துறை, வனத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் தனி யார் நாற்றாங்கால் பண்ணை களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயி களுக்கு வழங்கப்படும்.கோவையில் மாவட்ட த்தில் விவசாயி களுக்கு வழங்கு வதற்குத் தேவையான 3 லட்சம் மரக்க ன்றுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது நிலங்களின் வரப்பு ஓரத் தில் நடவு செய்வதற்கு ஹெக்டேருக்கு 160 மரக் கன்றுகளும், ஊடு பயிராகவும் மற்றும் அடர் நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு ஹெக்டே ருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர்களுக்கு மட்டுமே மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் துறையின் உழவன் செயலியில் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்து முன்னுரிமை அடிப் படையில் பெற்றுக் கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    ×