search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For charter training"

    • கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு கடந்த 18.07.2022 முதல் 28.07.2022 வரை விண்ணப்பங்கள் பெற்றுகொள்ளலாம்.
    • 01.08.2022 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வக்குமார் வெளியிட்ட செய்தி

    குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு கடந்த 18.07.2022 முதல் 28.07.2022 வரை விண்ணப்பங்கள் பெற்றுகொள்ளலாம். விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் 10,+2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் தகுதி உடையவர் ஆவார்கள். 01.08.2022 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    இப்பயிற்சிக்கான விண்ணப்பத்தினை நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலை யத்திற்கு நேரில் வந்து ரூ.100/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேற்படி மேலாண்மை நிலையம், 796- சேலம் பிரதான சாலை (மயில்வாகனம் காம்ப்ளக்ஸ்) முருகன் கோயில் பேருந்துநிறுத்தம் அருகில், நாமக்கல் 637001 என்ற முகவரிக்கு கூரியர் அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்பலாம் என நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பயிற்சி பெறாத பணியாளர்களுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது.
    • இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வரும் 28-ந் தேதி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

    கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பயிற்சி பெறாத பணியாளர்களுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது.

    இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வரும் 28-ந் தேதி வரை வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 1-ந் தேதி தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கைக்கான கல்வித்தகுதி 11-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது புதிய 10-ம் வகுப்பு தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களில் முறையாக நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் வயது வரம்பின்றி இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவர்கள் ஆவர்.

    இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.15,050 ஆகும். இதன் சிறப்பம்சமாக வார விடுமுறை நாட்களில் மட்டும் வகுப்புகள் நடைபெறும். அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் தவிர தனியார் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி இல்லை.

    பயிற்சியில் சேருபவர்கள் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (796, சேலம் பிரதானசாலை, முருகன் கோவில் அருகில், நாமக்கல்) நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (04286-290908, 9080838008) தொடர்பு கொள்ளலாம் எனவும் என நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    ×