search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish vendor death"

    மீன் ஏற்றி வந்த லோடு ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து மீன் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராஜாக்கமங்கலம்:

    வேர்கிளம்பி அருகே மணலிக்கரை ஆற்றூர் கோணத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 45), லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். 

    நேற்று மாலை குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகள் லிபின் (24), ஜஸ்டின் (30) உள்பட 5 பேரும், லோடு ஆட்டோவில் கன்னியாகுமரிக்கு மீன் வாங்குவதற்காக வந்தனர். மீன் வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினார்கள். லிபினும், ஜஸ்டினும் ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்தனர். 

    லோடு ஆட்டோவில் மீன்களை ஏற்றிக்கொண்டு ஈத்தாமொழி மங்காவிளை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த 7 அடி ஆழம் கொண்ட சானலில் லோடு ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோவின் பின்னால் இருந்த லிபின், ஜஸ்டின் இருவரும் அதில் சிக்கிக் கொண்டனர். லிபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். ஜஸ்டின் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இதுபற்றி ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த லிபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோவை கிரேன் மூலமாக இன்று காலை மீட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்த மீன்கள் சிதறி கீழே விழுந்தது. மீன்களை அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் எடுத்துச் சென்றனர்.
    ×