search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish prices"

    • கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
    • வழக்கமாக கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன்வரத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 200 ரூபாய்க்கும், நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், சிறிய வகை இறால் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் 400 ரூபாய்க்கும், பாறை 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    சென்னை-புறநகர் பகுதியில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மாமல்லபுரம்:

    ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை காலம் அமலில் இருக்கிறது.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1000, வவ்வால் ரூ. 750, சங்கராரூ. 350, நண்டு ரூ. 300, இறால் ரூ. 400, பாறை ரூ. 800, கடமா ரூ. 400, அயிலை ரூ. 300 என்று விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இதை சரி செய்யும் வகையில் கேரளா, ஆந்திரா, ஓடிசா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. இதன் மூலம் விலையை குறைத்து விற்பனையை அதிகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 45 நாட்கள் தடைக்காலத்தை 61 நாட்களாக உயர்த்தியதால் மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம், மரக்காணம் சுற்று வட்டார கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×