search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIRE INCIDENT"

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் கொளுத்தி வரும் கோடை வெயிலில் குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    சென்னை பெருநகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இரண்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து தரம் பிரிக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்குகளில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள் சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பிடித்து எரிவதையோ, சிறு தீப்பொறி மூலம் விபத்து ஏற்படுவதையோ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் வரை குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளில் தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு பொறியாளர் பாலமுரளி தெரிவித்தார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் இந்த இரண்டு கிடங்குகளிலும் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    பெருங்குடியில் 225.16 ஏக்கர் குப்பை கிடங்கை கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.

    பெருங்குடி குப்பை கிடங்கில் 2021-ம் ஆண்டு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அது உடனே கட்டுப்படுத்தப்பட்டது. தனியாரிடம் இருந்து 3 டேங்கர்கள் வாடகைக்கு எடுத்து குப்பை மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் 2 கிடங்கிலும் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி லாரிகள் மூலம் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. குப்பை குவியல்களுக்கு இடையே 3 மீட்டர் அகலமுள்ள வழித்தடங்களும் தீ பரவாமல் தடுக்க அமைக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 2 முறை அல்லது அதற்கு மேல் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

    இது தவிர தீயணைப்பு வாகனங்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பீடி, சிகரெட் துண்டுகளால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குப்பை கிடங்கில் புகை ஏற்பட்டால் உடனடியாக அதனை அணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலம் முடியும் வரை குப்பை கிடங்குகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    லக்னோ:

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்துகளும் ஏற்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோபால்பக் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 26 பட்டாசு கடைகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில் 9 பேரின் நிலையை கவலைக்கிடமாக உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • தினமும் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விற்பனை நடைபெற்று வருகிறது.
    • மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை.

    கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு கோவை மாநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும்.

    இந்த மீன் மார்க்கெட் அருகே புதர் மண்டிய பகுதி காணப்படுகிறது. இந்த பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அங்குள்ள பகுதிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை அங்கு மீன் கடை நடத்தி வருபவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. அங்கு மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏ.டி.எம். மையத்தில் எந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    செங்குன்றம்:

    சென்னை புழல் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டலும், அதன் அருகே தனியார் ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகின்றன. நேற்று இரவு ஓட்டலில் வியாபாரத்தை முடித்துவிட்டு அதன் உரிமையாளர் பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று அதிகாலை தனியார் ஏ.டி.எம். மையமும், ஓட்டலும் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் தனியார் ஏ.டி.எம். எந்திரம், ஓட்டலில் இருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. ஏ.டி.எம். மையத்தில் எந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே எந்திரத்தில் இருந்து தீயில் கருகிய பணத்தின் மதிப்பு தெரியவரும்.

    இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனியார் ஏ.டி.எம். மையத்தில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி ஏ.டி.எம். மையத்தில் பற்றிய தீ அருகில் இருந்த ஓட்டலுக்கு பரவியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    • தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாகவும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
    • கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த குடோன் ஒன்றும் உள்ளது.

    இதனை கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் கடையின் மேல் பரப்பில் உள்ள குடோனில் இருந்து இன்று காலை 8.15 மணி அளவில் திடீரென்று கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அப்பகுதியினர் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடைக்கு அருகாமையில் வணிக நிறுவனங்கள் நடத்தி வந்தவர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வெளியே வந்தனர்.

    இதற்கிடையே ஒரு சில விநாடிகளில் கரும்புகை வெளியேறிய குடோனில் தீ பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மதுரை அனுப்பானடி, தல்லாகுளம், திடீர் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மின்னல் வேகத்தில் விபத்து நடந்த பகுதிக்கு வந்தன.

    அதில் வந்த வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாகவும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. நெரிசல் மிக்க பகுதி என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு தடுப்பு ஏற்படுத்திய போலீசார் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அனுமதிக்கவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வழங்கப் பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் சில இடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. தீயணைப்பு துறையினர் மாநகராட்சி சார்பாக பழமையான கட்டிடங்களை கண்டறிந்து ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தீ விபத்தால் இப்பகுதி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. தீ அணைக் கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த குடோனில் தீப்பிடிக்க தொடங்கியது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

    • இன்று அதிகாலையில் 2-வது மாடியில் இருந்து கரும்பு புகை எழுந்துள்ளது.
    • தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.

    நெல்லை:

    பாளை பகுதியில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையம் 3 மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது.

    தரைத்தளத்தில் தபால் நிலையமும், முதல் தளத்தில் சிக்கன நாணய சங்கம், 2-வது தளத்தில் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட வற்றுடன் இந்த அலுவலகம் செயல்படுகிறது.

    இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலையில் 2-வது மாடியில் இருந்து கரும்பு புகை எழுந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாளை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்புத் வீரர்கள் தபால் நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 2-வது தளத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.

    சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏதேனும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சந்திப்பு பகுதியில் ஒரு மருந்து கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உடனடியாக வந்து தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • எந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • எந்திரம் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ரெட்டில வலசு பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. நேற்று பகலில் அங்குள்ள எந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் யாருக்கு எவ்வித காயம் இல்லை. எந்திரம் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாகின. 

    • போடி புதூரில் கர்னல்ஜான் பென்னிகுக் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை உள்ளது.
    • சம்பவத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி புதூரில் கர்னல்ஜான் பென்னிகுக் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை உள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் மூடைகள் அரிசி, பருப்பு சாக்குகளும், புத்தக பாரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டிருந்து.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இதுகுறித்து வங்கியின் செயலாளர் ராமகிருஷ்ணன் போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் நகராட்சியில் தினசரி குப்பைகள் 10 டன்னிற்கு அதிகமாக குவிந்து வருகின்றன.
    • தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த கோரி அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் இறங்கியதால் பதற்றம் நிலவியது.

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வெளியூர், உள்ளூர் பஸ் நிலையம், வங்கிகள், குடியிருப்புகள், உருளைக்கிழங்கு மண்டிகள், பழைய இரும்பு குடோன்கள். காய்கறி சந்தைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தினசரி குப்பைகள் குறைந்தது 10 டன்னிற்கு அதிகமாக குவிந்து வருகின்றன. இந்த குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நேஷனல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து குப்பை கழிவுகள் தரம் பிரித்து அதனை உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருதவால் குப்பை மேடுகளில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை மூட்டமாக இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக சுற்று வட்டார கிராம மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை அதனை அணைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபடவில்லை என கூறப்பட்டது. இதனிடையே மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 9 பேர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கிற்கு சென்று அதனை அணைக்க வேண்டும் என புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு நகராட்சி ஆணையாளர் வினோத், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் வந்து குப்பை மேட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுபோல் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • சுரேஷ் என்பவர் பணிமனையில் தீப்பிடித்து எரிந்தது.
    • தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் என்பவர் பணிமனையில் தீப்பிடித்து எரிவதை அக்கம் பக்கம் பார்த்து சுற்றி குடியிருப்பு உள்ளதா லும் உடனடியாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோத்தகிரி நிலைய அலுவலர் கருப்பசாமி மற்றும் முதன்மை தீயணைப்பாளர் மாதன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்து தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • அதிகாலை 2 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது.
    • மூன்று மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கேயம்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை எதிரே பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்ததும் குடோனை மூடிவிட்டு மாணிக்கம் வீட்டிற்கு சென்றார்.இந்தநிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. சற்று நேரத்தில் குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் குடோன் உரிமையாளர் மாணிக்கத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இருந்த போதிலும் குடோனில் இருந்த வேஸ்ட் பனியன்கள் மற்றும் 2 லோடு ஆட்டோக்கள், ஒரு மோட்டார் சைக்கிள் என அனைத்தும் எரிந்து நாசம் ஆனது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

    அதில் அவர்கள் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். தற்போது அவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் அனைக்கப்பட்டது. எனினும் அவர்களது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஜெயக்குமார் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அதில், தனக்கு வேண்டாத சிலர் தோட்டத்தில் உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு தீவைத்து சென்றுள்ளனர். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    ×